நிர்பயா வழக்கில் நான்கு பேரின் தூக்கு உறுதி - Lanka News Web (LNW)

நிர்பயா வழக்கில் நான்கு பேரின் தூக்கு உறுதி

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான 4 பேரின் தூக்கு தண்டனையை இந்திய உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக, டெல்லி நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று உறுதிசெய்துள்ளது.

டெல்லியில், கடந்த 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி ஓடும் பேருந்தில் இருந்து மருத்துவ மாணவியான நிர்பயா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டார்.

இதனால், படுகாயமடைந்த அவர்வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

அத்துடன், இதில் தொடர்புடைய சிறுவனை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், 2014ஆம் ஆண்டு சிறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, மரண தண்டனையை இரத்துச்செய்யுமாறு குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை இன்று அறிவித்ததுடன், அவர்களது மேல்முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

போலிக் கடவுச்சீட்டுக்களுடன் பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள இலங்கையர்கள்

பிப்ரவரி 18, 2019

பெரும்பாலான இலங்கையர்கள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் பயணித்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள...

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு

பிப்ரவரி 18, 2019

வடகொரியா அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை...

கொழும்பில் ஒரு வழிப் போக்குவரத்து

பிப்ரவரி 18, 2019

கிங்ஸ்லி வீதி சுற்றுவட்டத்திலிருந்து கேரி வித்தியாலயம் சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் ஒரு வழிப்...

ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

பிப்ரவரி 18, 2019

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவிற்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா

பிப்ரவரி 14, 2019

அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

மாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...!

பிப்ரவரி 12, 2019

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...

சுனாமி அனர்தத்தின் பின் அரசினால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் வழங்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

பிப்ரவரி 12, 2019

சுனாமி அனர்தத்தின் பின் அரசினால் மருதமுனை மேட்டுவட்டை 65M வீட்டுத்திட்டத்தில் 178 வீடுகள்...

அரசியலுக்கு தயாராகும் விஜய் அண்டனி

பிப்ரவரி 12, 2019

தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை தருகிறார் விஜய் அண்டனி