உடல் பருமனால் புற்றுநோய்

உடல் பருமனால் புற்றுநோய்

6 February 2019 09:30 am

அமெரிக்காவில் உடல் பருமனால் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் மக்கள் தொகையில் மூன்றில் 2 மடங்கு மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.

அங்கு சுமார் 2 கோடி பேர் உடல் எடை அதிகரிப்பால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

எனவே அங்கு இதுகுறித்த கணக்கெடுப்பும் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1995 முதல் 2015-ம் ஆண்டு வரை 50 வயதுக்குட்பட்ட உடல் பருமனான ஆண் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் உடல் பருமன் உள்ளவர்கள் புற்றுநோய் தாக்கத்துக்கு ஆளாகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கணையம், சிறுநீரகம், கர்ப்பபை மற்றும் பித்த நீர்ப்பையில் புற்றுநோய் தாக்கம் இருந்தது. இவை இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இளம் வயதினரை அதிகம் தாக்கியுள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளில் உடல் பருமன் ஆனவர்கள் எண்ணிக்கை 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

இவர்களுக்கு புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பதால் உடல் பருமனை குறைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.