உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை - Lanka News Web (LNW)

உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை

இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. 
இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்த டீன் வில்கின்ஸ்-நவோமி ஃபிண்ட்லே தம்பதியருக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி  பெண் குழந்தை ஒன்று பிறந்தது. 
 
லெய்செஸ்டரில் உள்ள கிளென்ஃபீல்ட் மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தைக்கு வனெலோப் ஹோப் வில்கின்ஸ் என பெயரிட்டனர். 
 
இக்குழந்தை பிறக்கும்போதே நெஞ்செலும்பு இல்லாமலும், இதயம் உடலுக்கு வெளியே இருந்து துடித்தபடியும் காணப்பட்டது. 
 
இதையடுத்து குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு அருகில் உள்ள குயின்ஸ் மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு 14 மாத தொடர் பராமரிப்புக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை தேறியதையடுத்து, குழந்தை நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. குழந்தை குணமடைந்ததால் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இது மிகவும் அற்புதமான தினம் என்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தது அளவுகடந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும்  குழந்தையின் தாய் நவோமி ஃபிண்ட்லே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 
 
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், குழந்தை சிரமம் இன்றி மூச்சுவிடுவதற்காக 24 மணி நேரம் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என மருத்துவமனை கூறியுள்ளது. 
 
அதன்படி வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு குழந்தையின் சுவாசம் கண்காணிக்கப்படுகிறது. 
 
இதயம் வெளியில் இருந்தபடி பிறந்த குழந்தை, அறுவைச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தது இதுவே முதல் முறையாக இருக்கும் என கிளென்ஃபீல்ட் மருத்துவமனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆளுநரின் அனுதாப செய்தி

ஏப்ரல் 21, 2019

இன்றைய விசேட நாளில் இலங்கையின் மதத்தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான...

கொச்சிக்கடை தேவாலயத்தின் புதிய நிலவரம் (புகைப்படங்கள் )

ஏப்ரல் 21, 2019

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் பிரேத...

190ற்கும் அதிகமானோர் பலி

ஏப்ரல் 21, 2019

இலங்கையில் சில இடங்களில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் 190ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு பூட்டு

ஏப்ரல் 21, 2019

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்?

ஏப்ரல் 15, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

சித்திரா பௌர்ணமி

ஏப்ரல் 19, 2019

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் திருடுபவர்களைவிட திருடரைப் பிடிப்போருக்கு நல்ல வருமானமாம்!

ஏப்ரல் 15, 2019

தற்போது இலங்கையில் மிகவும் இலாபமான வியாபாரம் திருடுவது அல்ல எனவும், அந்தத் திருடர்களைப்...

கட்சி தாவல்களினால் அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

ஏப்ரல் 15, 2019

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள்...