புதிய வகையான ஆயுதத்தை சோதனை செய்த வட கொரியா - Lanka News Web (LNW)

புதிய வகையான ஆயுதத்தை சோதனை செய்த வட கொரியா

வட கொரியா சக்தி வாய்ந்த போர் தளவாடங்கள் அடங்கிய புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் நேரில் கண்காணித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு, வட கொரியா செய்துள்ள முதல் ஆயுத பரிசோதனை ஆகும்.

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில் சில பணிகள் நடப்பதாக செயற்கைகோள் படங்களில் தெரிய வந்ததாக தகவல் வெளியான நிலையில், புதிய சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

ஆனால், தென்கொரியா இந்த சோதனை தொடர்பாக எந்த ரேடார் தகவல்களையும் பெறவில்லை. எனவே, ஏவுகணை சோதனையாக இந்த சோதனை இருக்காது என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

மே 21, 2019

மகிந்தவின் நேரடி விஜயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அச்சம் தவிர்த்து பாடசாலைகளுக்கு வருகை தந்திருக்கும் மாணவர்களை…

சமீபத்திய செய்திகள்

ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதிக்கத் தயார்

மே 21, 2019

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதம் செய்வதற்கு...

மகிந்தவின் நேரடி விஜயம்

மே 21, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அச்சம் தவிர்த்து பாடசாலைகளுக்கு வருகை தந்திருக்கும் மாணவர்களை...

ஜனாதிபதிக்கு ஒரு வார கால அவகாசம்

மே 21, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்களே அபி...

அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள ரோஹித்த

மே 21, 2019

மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறு;பபினர் ரோஹித்த அபேகுணவர்தன அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளதாகக்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb