நேபாளத்தின் முதல் செயற்கைகோள்
Tuesday, 26 May 2020

நேபாளத்தின் முதல் செயற்கைகோள்

19 April 2019 11:00 am

நேபாளம் முதன் முறையாக செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளது.

நேபாள்சாட்-1 என பெயரிடப்பட்டுள்ள குறித்த செயற்கைகோளை நேபாளத்தை சேர்ந்த ஆப்காஸ் மாஸ்கி மற்றும் ஹரிராம் ஸ்ரெத்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த செயற்கைகோள் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருந்து நேற்று மதியம் 2.31 மனிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த தகவலை நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி தெரிவித்துள்ளது.

நேபாளம் முதன்முறையாக சொந்தமாக தயாரித்த செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

இது தமது நாட்டுக்கு பெருமை என நேபாள பிரதமர் கே.ஆர்.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் அறிவியல் மற்றும் தொழிநுட்ப அகடமி குறித்த செயற்கை கோளுக்காக சுமார் 20 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது.

இந்த செயற்கைகோள் 1.3 கிலோகிராம் எடையை கொண்டதாகும்.