தடைகள் தண்டனையில்லை - Lanka News Web (LNW)

தடைகள் தண்டனையில்லை

தேர்தல் பிரசாரங்களில் மத்திய வங்கி பிணைமுறி விடயமே பிரதான பேசுபொருளாக இருக்கிறது. அதற்கேற்றாற்போல் மத்திய வங்கியும் ச ர்ச்சைக்குரிய பிணைமுறி ஏலத்துக்குப் பின்னர் தனது அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்தக் கொள்ளையில் பங்குகொண்டதாகக் கருதப்படும் பிரதான நிறுவனமான பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக ஈட்டிய இலாபப் பங்கீடுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதே இப்போது பெரும் கேள்விக்குறியாகவிருக்கிறது.

மத்திய வங்கியின் பிரதான நேரடி முதலீட்டாளராக இருந்த பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனத்தின் 28 துணை நிறுவனங்களினதும் வங்கி மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்யவுள்ளதாக மத்திய வங்கி திடீர் அறிவிப்பை விடுத்தது.

இதன்பின்னர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோஸியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு கோட்டை நீதிவானால் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். அத்துடன், தற்போது சிங்கப்பூரில் உள்ள அர்ஜுன் மகேந்திரன் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனம்

f353fa347ce506a758897d996cc452d3_XL.jpgஇந்நிறுவனம் மத்திய வங்கியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பிணைமுறி ஏலத்தில் பிரதான முதலீட்டாளராக இருந்து வந்துள்ளது. இந்நிறுவனத்தோடு இணைந்து 5 துணை நிறுவனங்களும் 28 நிதிவழங்கல் கம்பனிகளும் உள்ளன.

பெர்பெச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனம், பெர்பெச்சுவல் பொசிட்டிவ் புரப்பர்டீஸ், பெர்பெச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ், பெர்பெச்சுவல் கெப்பிட்டல் நிறுவனம், பெர்பெச்சுவல் ஈக்விட்டீஸ் நிறுவனம், பெர்பெச்சுவல் பண்ட் மெனேஜ்மென்ட் ஆகியனவே பிரதான முதனிலை நிறுவனங்களாக செயற்பட்டுள்ளன.

பெர்பெச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனம் பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நிறுவனமாகும். இந்த நிறுவனம் பெர்பெச்சுவல் பொசிட்டிவ் புரப்பர்டீஸ் எனும் பெயரில் முன்னர் செயற்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனத்தினால், பெர்பெச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இலாபப் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனம் அரச முறிகளில் முதலீடு செய்திருந்ததுடன், தேசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1.1 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்திருந்தது.

2016 நவம்பர் மாதமளவில் பெர்பெச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனம் தமக்குரித்தான பெர்பெச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு 348 மில்லியன் ரூபா இலாபப் பங்குகளை வழங்கியுள்ளது.

பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனம் பெர்பெச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு உரித்தான ஒரு நிறுவனமாகும். பெர்பெச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனம், பெர்பெச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

பெர்பெச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், பெர்பெச்சுவல் கெப்பிட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும். பெர்பெச்சுவல் கெப்பிட்டல் நிறுவனம், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஜெப்ரி அலோசியஸ் ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனமாகும்.

பெர்பெச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனம் 642.69 மில்லியன் ரூபாவை பெர்பெச்சுவல் ஈக்விட்டீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. பெர்பெச்சுவல் ஈக்விட்டீஸ் நிறுவனம் தேசிய அபிவிருத்தி வங்கி, சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை அசோக் லேலண்ட் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளிலும் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

பெர்பெச்சுவல் ஈக்விட்டீஸ் நிறுவனம் பங்குச் சந்தையின் ஒரு தரப்பினராக செயற்பட்டு வந்துள்ளது. பெர்பெச்சுவல் பண்ட் மெனேஜ்மென்ட் எனப்படும் மற்றுமொரு நிறுவனமும் உள்ளதுடன், அதன்மூலம் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதில்லை.

பெர்பெச்சுவல் குழுமத்தினால் தேசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து சுமார் 2 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இவ்விடயங்கள் பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 2,40,000 ஒலிப்பதிவுகள் மற்றும் பெரும் எண்ணிக்கையான ஆவணங்களின் மூலம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்களுக்கு தடைவிதிப்பதால் மோசடிகளை நிறுத்திவிட முடியுமா?

இந்நிறுவனங்களின் நிதிச்செயற்பாடுகளுக்கு மத்திய வங்கி தடைவிதித்ததன் மூலம் மத்திய வங்கிக்கு இரண்டு வகையான விளைவுகள் ஏற்படக்கூடும்.

2008 ஆம் ஆண்டிலிருந்தே பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனம் பிரதான முதலீட்டு நிறுவனமாக இருந்துள்ளமையால் இந்நிறுவனங்களைத் தடைசெய்தால் மத்திய வங்கிக்கு பெரும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்ததாக, இந்நிறுவனங்களைத் தடைசெய்வதால் ஏற்படக்கூடிய நட்டஈடுகளை மீள வசூலிக்கும் வழிவகைகளை அரசு இல்லாமலாக்கிக்கொண்டுள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் மூலம் பெர்பெச்சுவல் நிறுவனம் ஆகக்குறைந்தது
688 மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது.

மேலும், இரண்டாம் நிலைச் சந்தையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பெர்பெச்சுவல் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ள ஆகக்குறைந்த இலாபம் 11,145 மில்லியன் ரூபாவாகும். இதனால் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டம் 8,529 மில்லியன் ரூபாவாகும். அதாவது, 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

இந்த மிகப்பெரும் தொகையை மீள வசூலிக்க என்ன வகையான பொறிமுறையை அரசு கையாளும் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அத்தோடு, இந்த அறிக்கை தற்போது முற்றுமுழுதாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் தங்களது வாக்கு வங்கிக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புத்தான் அதிகமாகக் காணப்படுகின்றது.

எனவே, ஏற்பட்ட நட்டத்தை மீளப்பெற எந்தவித திட்டமுமில்லாது அந்நிறுவனங்களைத் தடைசெய்வதால் ஆவது ஒன்றுமில்லை. அத்தோடு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் முறைகேடான முறையிலும் தவறான முறையிலும் தீர்மானங்களை மேற்கொண்டு பிணைமுறி ஏலம் தொடர்பான செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டிருப்பதுடன் உள்ளக தகவல்களை வெளித்தரப்பினருக்கு பெற்றுக்கொடுக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆகையால், தடைசெய்யப்பட்ட பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனத்தின் 28 துணை நிறுவனங்களுக்கும் உரித்தான சொத்துவிபரங்கள் மற்றும் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் குடும்பத்தினரின் ஆதிக்கம் தொடர்பில் பல உறுதியான தீர்மானங்கள் எடுத்தாக வேண்டும்.

தற்போதும் இந்நிறுவனங்கள் இலங்கையின் வர்த்தக சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதால் உடனடியான தீர்மானங்கள் வெற்றியளிக்காது என்றே நம்பப்படுகிறது.

இந்த சர்ச்சைக்குரிய ஏலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி முறைகேடான விதத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் உண்மையான தொகையை அறிவதற்கு சட்டரீதியான ஆய்வு (தடயவியல் தணிக்கை பரிசோதனை Forensbc Audit Exambnatioz) மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கூறப்பட்ட போதும் மத்திய வங்கி அதற்குரிய ஏற்பாடுகள் எவற்றையும் இதுவரையில் முன்வைக்கவில்லை.

இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த இறுதி அறிக்கையில் மத்திய வங்கியில் எதிர்காலத்தில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கும் ஆணைக்குழுவின் தற்கால பரிந்துரைகளை செயற்படுத்தக்கூடிய வகையிலும் பழைய சட்டமூலத்தை ரத்துச்செய்து புதிய நாணய சட்டமூலத்தை (Monetary Law Act) அறிமுகப்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்தாலும் இறுதியாக மத்திய வங்கியில் இடம்பெற்ற நிதிச்சபைக்கூட்டத்தில் இதற்கான எந்த ஒரு உறுதிமொழிகளும் வழங்கப்படவில்லை.

எனவே, இறுதி அறிக்கை உறுதியளித்ததன்படி மத்திய வங்கியின் செயற்பாடுகளிலும் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களைத் தண்டிப்பதிலும் வினைத்திறனான செயற்பாடுகளை மத்திய வங்கி முன்னெடுக்க வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகளை முறையான ஆய்வுக்கு உட்படுத்துவதுடன், இந்நிதியத்தின் செயற்பாடுகளை சரியான வழிக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும். ஊழியர் சேமலாப நிதியத்தை மீள்கட்டமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மோசடிக்குள்ளான பணத்தை மீளப்பெற மாற்று வழியாக நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்று நிறைவேற்றப்பட வேண்டும்.

அரசுக்கு ஏற்பட்டிருக்கின்ற நட்டமான 11,145 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மீள் அறவீடு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் 11,145 மில்லியன் ரூபாவில் ஊழியர் சேமலாப நிதி, மஹாபொல புலமைப்பரிசில் நிதி, தேசிய சேமிப்பு வங்கியின் நிதி, இலங்கை காப்புறுதி நிறுவன காப்புறுதி கூட்டுத்தாபன நிதியம் ஆகியவற்றின் தொகை 8,529 மில்லியன் ரூபாவை பாதுகாப்பதற்கான விசேட அவதானமும் செலுத்தப்பட வேண்டும்.

அவ்வாறின்றேல் வெறும் தேர்தல்கால வாக்குறுதிகளுக்காக மட்டும் இந்த அறிக்கையைப் பயன்படுத்திவிட்டு கிடப்பில் கிடக்கும் எத்தனையோ வழக்குகளில் இதுவும் ஒரு சாதாரண வழக்காக மாறிவிடும் என்பதே உண்மை.

பா.ருத்ரகுமார்

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆளுநரின் அனுதாப செய்தி

ஏப்ரல் 21, 2019

இன்றைய விசேட நாளில் இலங்கையின் மதத்தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான...

கொச்சிக்கடை தேவாலயத்தின் புதிய நிலவரம் (புகைப்படங்கள் )

ஏப்ரல் 21, 2019

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் பிரேத...

190ற்கும் அதிகமானோர் பலி

ஏப்ரல் 21, 2019

இலங்கையில் சில இடங்களில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் 190ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு பூட்டு

ஏப்ரல் 21, 2019

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்?

ஏப்ரல் 15, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

சித்திரா பௌர்ணமி

ஏப்ரல் 19, 2019

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் திருடுபவர்களைவிட திருடரைப் பிடிப்போருக்கு நல்ல வருமானமாம்!

ஏப்ரல் 15, 2019

தற்போது இலங்கையில் மிகவும் இலாபமான வியாபாரம் திருடுவது அல்ல எனவும், அந்தத் திருடர்களைப்...

கட்சி தாவல்களினால் அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

ஏப்ரல் 15, 2019

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள்...