வேற்றுக்கிரகவாசிகளைத் தொடர்பு கொள்வது எவ்வாறு?

வேற்றுக்கிரகவாசிகளைத் தொடர்பு கொள்வது எவ்வாறு?

19 May 2018 07:00 pm

பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் என்ற செய்திகள் அதிகரித்துவரும் நிலையில் பூமியைத் தாண்டியுள்ள கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்கின்றனரா என்ற தேடல்கள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்கின்றனர் என்பதற்கான சான்றுகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. என்றாலும் அவற்றை உறுதிப்படுத்த விஞ்ஞானிகளுக்கு தகுந்த ஆதாரங்கள், நிறுவுகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வெள்ளிக்கிரகத்தில் உள்ள அமில மேகக் கூட்டங்களுக்கு நடுவே வேற்றுக்கிரகவாசிகள் வாழக் கூடும் என நாசா ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போது குறித்த மேகக் கூட்டங்களில் வாழும் பக்றீரியாக்கள் ஒளியை உறுஞ்சும் தன்மையினை வெளிப்படுத்தியுள்ளன. இந்தப் பண்பு பூமியில் உள்ள பாசிகளை ஒத்து காணப்பட்டுள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் உயிரினங்கள் தோன்ற பாசிக்களே காரணம் என்ற சான்றுகள் காணப்படுகின்றமையினால், வெள்ளிக்கிரக மேக கூட்டத்தில் நுண்ணுயிர்கள் வாழக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறெனின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக வேற்றுக்கிரகங்களில் நிச்சயமாக அறிவிற் சிறந்த உயிரினங்கள் வாழக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருவதோடு இது தொடர்பிலான ஆய்வுகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான தொடர் கண்டுபிடிப்புகளின் காரணமாக வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், அவர்களை தொடர்பு கொள்வது எவ்வாறு,? அவர்கள் வசிப்பது எங்கே? ஏன் பூமிக்கு வந்து செல்கின்றனர் போன்ற பல கேள்விகள் விஞ்ஞானிகள் மத்தியில் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.