அண்டவெளியில் ஏற்படும் அபூர்வ நிகழ்வு

அண்டவெளியில் ஏற்படும் அபூர்வ நிகழ்வு

30 July 2018 07:32 am

பூமியை அண்மித்த வகையில் செவ்வாய் கிரகம் பயணிப்பதாக இலங்கை கோள் மண்டலம் தெரிவித்துள்ளது.

15 வருடங்களுக்கு பின்னர் செவ்வாய்க்கிரகம் தனது அண்டவெளி சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளது.

இதுவொரு அபூர்வமான நிகழ்வு என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கோள் மண்டல கற்கைக் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தரன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் கிழக்கு வானில் செவ்வாய் கிரகத்தை காண முடியும். அதிகாலை வேளையில் மேற்கு வானில் இந்தக் கிரகத்தை காண முடியும்.

நாளை மற்றும் நாளை மறுதினம் செவ்வாய்க் கிரகத்தை மிகத் தெளிவாக காண இலங்கை மக்களால் முடியும் என்று கலாநிதி சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.