ஒலிம்பிக் பதக்கம் வென்றெடுக்க பங்களிப்புச் செய்வோம் : சுரேஸ் சுப்ரமணியம்
Wednesday, 20 Nov 2019

ஒலிம்பிக் பதக்கம் வென்றெடுக்க பங்களிப்புச் செய்வோம் : சுரேஸ் சுப்ரமணியம்

28 February 2018 08:40 am

இலங்கை விளையாட்டுத் துறையில் அண்மைக்காலமாக ஒலிம்பிக் குழுவின் தேர்தல் குறித்து அதிகமாக பேசப்பட்டது.

கடந்த 23ஆம் திகதி இதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஷ், செயலாளராக மெக்ஸ் அணிகள் வெற்றிபெற்றிருந்தனர்.

இனி இருக்கும் சவால், நாடு என்ற ரீதியில் சர்வதேச தளத்தில் பெறவேண்டிய வெற்றியாகும். இனிவரும் காலங்களில் ஒலிம்பிக் குழுவின் வழிநடத்தலுடன், விளையாட்டுக் கழகங்களை இணைத்துக் கொண்டு இந்த வெற்றிப் பயணத்தை அடையவேண்டியிருக்கிறது.

விளையாட்டு வீர, வீராங்கனைகளை வெற்றிப்பாதையில் வழிநடத்துவதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியிருக்கிறது. விசேடமாக ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே இதன் வெற்றிப் பயணமாக இருக்கும்.

ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வெல்வது என்பது இலகுவான விடயமல்ல. 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னமும் இரண்டு வருடங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்றெடுக்கும் வீர, வீராங்கனைகளை இனங்கண்டிருக்க வேண்டும்.

இதற்கான ஆயத்தங்கள் குறித்து ஒலிம்பிக் குழுவின் புதிய அதிகாரிகளிடம் பேசினோம்.

இதுவே வெற்றிக்கான முதல் படியாக இருக்கும். இதுகுறித்து ஒலிம்பிக் குழுவின் புதிய அதிகாரிகளிடம் கேட்டபோது, தாம் இவ்வாறான வீர, வீராங்கனைகளை இனங்கண்டுகொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்றெடுப்பதற்கு தமது பங்களிப்பை முழுமையாக வழங்குவதாக ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவர் சுரேஸ் சுப்ரமணியம் தெரிவித்தார்.