பக்குவமடையாத சமூகமாக பிரச்சினைகளை நாம் அனுபவிக்கிறோம் - Lanka News Web (LNW)

பக்குவமடையாத சமூகமாக பிரச்சினைகளை நாம் அனுபவிக்கிறோம்

ஒரு தரப்பினர் தேசிய ஐக்கியம், நல்லிணக்கம் குறித்து பேசும்போது, மறுபக்கத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் வலுப்பெறுகிறது என வணக்கத்திற்குரிய கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

அண்மையில் கண்டியில் நடந்த வன்முறைகள் இதற்கு கண்முன் தெரிந்த சிறந்த உதாரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரலாற்றில் சிறந்தவொரு பாடத்தை மக்கள் கற்றுக்கொள்ளவில்லை எனில், மீண்டும் இதே போன்றதொரு அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவம் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த தேரர்,
''பௌத்தம் என்பதும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் போதிக்கப்பட்டதல்ல. மனித குலத்திற்காகவே போதிக்கப்பட்டது. ஒரு மனிதன் பிறப்பினால் உயர்வதில்லை என பௌத்த பெருமான் கூறுகிறார். ஒருவன் செயலின் மூலமே அவன் உயர்வடைகிறான். மனித குலத்தை தேடிச் சென்று அவர்களின் நலனுக்காக பங்களிப்புச் செய்யுங்கள் என்றே கௌதம புத்தர் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்குப் போதித்தார். இதன்மூலம் ஒன்று தெளிவாகக் கூறப்படுகிறது. மனித குலத்தில் பிரிவினையொன்று இருக்கவில்லை. எனினும், இன்று நாம் பார்க்கும்போது, அனைத்து மதங்களும் மனிதர்களைப் பிரித்துவைத்துள்ளார் என்பது புலனாகிறது. மனிதர்களைப் பிரித்து, அந்த எண்ணக்கருவை உருவாக்கி இறுதியாக சமாதானமாக இருக்குமாறு போதிக்கின்றனர். இது குறித்து சிந்தித்தே எமது இந்த இடத்திற்கு வரும் எந்தவொரு மனிதரை ஏற்றுக்கொள்ளும் ஒரு கொள்கையை ஏற்படுத்தினோம். என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையில் அரசியல் அதிகாரத்திற்காக சமூகத்தைப் பிரித்து வைக்கின்றனர். கருத்தியல் ரீதியாக இந்தப் பிரிவு ஏற்படுவதில்லை. இனம், மதம், ஜாதி வாரியாக பிரித்துக் கொள்வதே இவர்களுக்கு இலகுவாக இருக்கிறது. அரசியல் தேவைகளுக்காக இந்தப் பிரிவினைகளைத் தீவிரப்படுத்துகின்றனர். ஆங்கிலயர் ஆட்சிக் காலத்திலும், வெளிநாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்புக்களின் போதும் இலங்கைவாழ் மக்கள் துன்பங்களை அனுபவத்தனர். குறிப்பாக சிங்கள, தமிழ் மக்கள் இந்தத் துன்பங்களை அனுபவித்தனர். இநத துன்பங்களினால் காயப்பட்ட மக்களை ஆற்றுவதற்கு எந்தவொரு வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே, பரம்பரை பரம்பரையாக இந்தக் காயங்கள் கடத்தப்படுகின்றன. பௌத்த தேரர்களை எடுத்துக் கொண்டால், தாங்கள் அழிந்துவிடுவோமா அல்லது தமது இனம் அழிக்கப்பட்டுவிடுமா என்ற எண்ணம் அந்தக் காயங்களுடன் வருகிறது. உண்மையாக கரையோரப் பிரதேசங்களில் விகாரைகள் கைவிடப்பட்டன. அவை பராமரிப்பற்று போகின்றன. இதனால் இந்தக் காயங்கள் பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றன. இந்தக் காயங்களைப் பயன்படுத்தி அரசியல் நோக்கங்களுக்காக இவற்றைப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் இலகுவாக இருக்கிறது. என்று கூறினார்.

இலங்கையில் உண்மையில் கொள்ளையிடும் அரசியல் கலாசாரமே இருக்கிறது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையிடப்படுகிறது. இவர்களின் அரசியல் செயற்பாடுகளில் எவ்வித தூர நோக்கையும் காணமுடிவதில்லை. கடந்த காலங்களைப் பார்த்தால் தேர்தலில் வெற்றிபெறுவதற்காகக் கூறிய விடங்கள், தேர்தல் முடிந்தபின்னர் மறந்துபோய்விடுகின்றன. கடந்த ஐந்து வருடங்களைப் பார்த்தால் இது புலனாகிறது. மக்களின் எண்ணங்களை துளிகூட புரிந்துகொள்ளாது இவர்கள் நடந்து கொண்டனர்.

சிறந்தவொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறுகின்றனர். எனினும், இதற்கான முயற்சிகள் போதுமானதாகத் தெரியவில்லை. நல்லிணக்கம் ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர். இவற்ற அலுவலகங்களை ஸ்தாபிக்கின்றனர். இவற்றுக்கு பணமும் வருகிறது. தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கே நிதியுதவி செய்யப்படுகிறது. இதற்காக திட்ட வரைவொன்று சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்காக கருதரங்குகள் பயிற்சிப் பட்டரைகள் நடத்தப்படுகின்றன. எனினும், நல்லிக்கத்தை ஏற்படுத்தவல்ல இந்த கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அந்த திட்ட வரைவை பூர்த்தி செய்வதற்காகவே இவை நடத்தப்படுகின்றன. இரண்டு வருடங்கள் இவற்றை செய்தோம் எனக் கூறுகின்றனர். சில நேரம் இதில் பங்குபற்றுவோருக்கும் பணம் கொடுக்கின்றனர். உண்மையில் இதற்கு ஒரு தேவையுடன் அல்லது அக்கறையுடன் ஒரு மனிதன் இதற்கு வரவேண்டும். இது எங்களின் பிரச்சினை என உணர்ந்தே ஒரு மனிதன் இங்கு வரவேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை.

 ஆக்கிரமிப்பாளர்களுடனேயே கிறிஸ்தவம் இலங்கைக்கு வந்தது. போர்த்துக்கேயர்களுடன் கிறிஸ்தவம் இலங்கைக்கு வந்தது. பின்னர் சுதேசியர்களிடமும் இது பரவத்தொடங்கியது. முன்னதாக லத்தீன் மொழியில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. பின்னர் இவை சுதேசிய மொழிகளில் நடத்தப்பட்டன. சுதேசிய கட்டகலைக்கேற்ப தேவாலயங்கள் கட்டப்பட்டன. கிறிஸ்தவம் இலங்கைக்கு வந்தது என்பது கடந்த காலத்திற்குரியது. தற்போதைக்கு பொருத்தமற்றது. எனினும், இஸ்லாம் ஆக்கிரமிப்புடன் வரவில்லை. அவர்கள் வர்த்தக ரீதியாக மிகவும் அமைதியாக வந்தவர்கள். விவாகங்கள் ஊடாக இந்த சமூகத்தில் உள்ளவர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டனர். 1000 ஆண்டுகள் ஒரு இனக் குழுமம் ஒரு நாட்டில் இருப்பார்களாயின் அவர்கள் சுதேசியர்கள். கலை, கலாசார, பண்பாட்டு ரீதியாக அவர்கள் சுதேசியர்கள். எனினும், கடந்த 30, 40 ஆண்டுகளில் அவர்கள் முற்றிலுமாக மாறுபட்ட கலாசாரத்தை போர்த்திக் கொண்டனர். இது தெளிவாகத் தெரிகிறது. உடை, பழக்க வழக்கங்கள் உடாக இவை தெளிவாகின்றன. அரசியல் ரீதியாக அவர்கள் தேசிய ரீதியான விடயங்களை முன்னிறுத்தி வாக்களிக்கவில்லை. இஸ்லாம் அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் வாக்களித்தனர். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைத் தெரிவுசெய்யும் போது இந்த வாக்குகளுக்காக குறித்த தரப்பினருக்கு அமைச்சுக்கள் வழங்கப்படுகின்றன. இதன்ஊடாக பொறாமை உள்ளிட்ட வெறுப்புணர்வுகள் ஏற்படக் காரணமாக அமைந்தன.

 தற்போது நல்லிணக்கம் முன்னெடுக்கப்படவில்லை. நல்லிணக்கம் என்பது முறுகல் ஏற்பட்ட இரு தரப்பினருக்கிடையில் ஏற்படுத்தப்படுவதாகும். எனினும், இங்கு புரிந்துணர்வு அற்றுப் போயுள்ளது. இங்கு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தற்போது வன்முறையை விரும்புவோர் இளைய சமூகமாக இருக்கிறது. போரின் இறுதிப் பகுதியை மட்டும் பார்த்தவர்கள் அவர்கள். அதன் ஆரம்பத்தில் இருந்து ஏற்பட்ட அழிவுகள் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு அடித்து வெல்ல முடியும் என்பது மட்டுமே தெரிந்திருக்கும். தற்போது போர் முடிந்துவிட்டது. அடிப்பதற்கு அவர்கள் தயார். ஆனால் அடிப்பதற்கு எதிரி ஒருவர் இல்லை. தற்போது எதிரியை உருவாக்கி, காண்பித்த பின்னர் அடிக்க முடியும். இவை அனைத்தும் பக்குவமடையாத தரப்பினரே இவற்றை செய்கின்றனர். நல்லிணக்கம் என்பவதைத் தாண்டிச் சென்ற விரிவான வேலைத் திட்டமொன்ற எமக்கு அவசியம். அதன் கீழேயே பக்குவமான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முடியும்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆளுநரின் அனுதாப செய்தி

ஏப்ரல் 21, 2019

இன்றைய விசேட நாளில் இலங்கையின் மதத்தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான...

கொச்சிக்கடை தேவாலயத்தின் புதிய நிலவரம் (புகைப்படங்கள் )

ஏப்ரல் 21, 2019

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் பிரேத...

190ற்கும் அதிகமானோர் பலி

ஏப்ரல் 21, 2019

இலங்கையில் சில இடங்களில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் 190ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு பூட்டு

ஏப்ரல் 21, 2019

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்?

ஏப்ரல் 15, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

சித்திரா பௌர்ணமி

ஏப்ரல் 19, 2019

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் திருடுபவர்களைவிட திருடரைப் பிடிப்போருக்கு நல்ல வருமானமாம்!

ஏப்ரல் 15, 2019

தற்போது இலங்கையில் மிகவும் இலாபமான வியாபாரம் திருடுவது அல்ல எனவும், அந்தத் திருடர்களைப்...

கட்சி தாவல்களினால் அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

ஏப்ரல் 15, 2019

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள்...