ஒலிம்பிக் பதக்கம் வென்றெடுக்க பங்களிப்புச் செய்வோம் : சுரேஸ் சுப்ரமணியம் - Lanka News Web (LNW)

ஒலிம்பிக் பதக்கம் வென்றெடுக்க பங்களிப்புச் செய்வோம் : சுரேஸ் சுப்ரமணியம்

இலங்கை விளையாட்டுத் துறையில் அண்மைக்காலமாக ஒலிம்பிக் குழுவின் தேர்தல் குறித்து அதிகமாக பேசப்பட்டது.

கடந்த 23ஆம் திகதி இதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஷ், செயலாளராக மெக்ஸ் அணிகள் வெற்றிபெற்றிருந்தனர்.

இனி இருக்கும் சவால், நாடு என்ற ரீதியில் சர்வதேச தளத்தில் பெறவேண்டிய வெற்றியாகும். இனிவரும் காலங்களில் ஒலிம்பிக் குழுவின் வழிநடத்தலுடன், விளையாட்டுக் கழகங்களை இணைத்துக் கொண்டு இந்த வெற்றிப் பயணத்தை அடையவேண்டியிருக்கிறது.

விளையாட்டு வீர, வீராங்கனைகளை வெற்றிப்பாதையில் வழிநடத்துவதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியிருக்கிறது. விசேடமாக ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே இதன் வெற்றிப் பயணமாக இருக்கும்.

ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வெல்வது என்பது இலகுவான விடயமல்ல. 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னமும் இரண்டு வருடங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்றெடுக்கும் வீர, வீராங்கனைகளை இனங்கண்டிருக்க வேண்டும்.

இதற்கான ஆயத்தங்கள் குறித்து ஒலிம்பிக் குழுவின் புதிய அதிகாரிகளிடம் பேசினோம்.

இதுவே வெற்றிக்கான முதல் படியாக இருக்கும். இதுகுறித்து ஒலிம்பிக் குழுவின் புதிய அதிகாரிகளிடம் கேட்டபோது, தாம் இவ்வாறான வீர, வீராங்கனைகளை இனங்கண்டுகொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்றெடுப்பதற்கு தமது பங்களிப்பை முழுமையாக வழங்குவதாக ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவர் சுரேஸ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்

அக்டோபர் 16, 2018

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி ஹட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று(செவ்வாய்கிழமை) காலை...

சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்

அக்டோபர் 16, 2018

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் ராஜபக்ஷ்வாகும். அவரை நியமிப்பதற்கு எமது...

அலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு

அக்டோபர் 16, 2018

சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான்...

‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்!

அக்டோபர் 16, 2018

மீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க

அக்டோபர் 11, 2018

#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க

அக்டோபர் 10, 2018

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...

துமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது

அக்டோபர் 11, 2018

மரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...

மைத்திரியுடன் சந்திப்பு நடந்தது : உண்மையைச் சொன்ன மகிந்த

அக்டோபர் 10, 2018

அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி...