"இந்தியன் 2" வில் அபிஷேக் பச்சன்

"இந்தியன் 2" வில் அபிஷேக் பச்சன்

22 January 2019 11:49 am

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘இந்தியன் 2'.

இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

உலகநாயகன் இதற்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாகவும், சித்தார்த் ஜோடியாக காஜல் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அத்துடன் வில்லனாக அபிஷேக் பச்சனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வில்லன் கதாபாத்திரத்திற்கு அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பின்னர் அக்‌ஷய் குமாரிடம் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதுடன், அவர் சில நிபந்தனைகளை விதிக்க, அபிஷேக் பச்சன் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.