காதலர் தினத்தில் தேவ்

காதலர் தினத்தில் தேவ்

31 January 2019 11:45 am

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் பின் நடிகர் கார்த்தி தேவ் என்ற படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரகுல்பிரீத் சிங் நடித்துள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்பட மேலும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ரஜத் ரவிசங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தேவ் ஒரு பயணத்தை மையமாக வைத்து காதல், குடும்ப உறவுகள், சண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய படமாகும்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்தியா முழுவதும் 55 இடங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பினர்.

தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு சான்றிதழ் அளித்து உள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் திகதி காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இதனை கார்த்தியும் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

அடுத்து மாநகரம் படத்தை இயக்கி பிரபலமான லோகேஷ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.

கதாநாயகி இல்லாத படமாக இந்த திரைப்படம் தயாராகிறது.

இந்த திரைப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.