விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதி

5 February 2019 06:47 am

முன்னணி நடிகைகளில் ஒருவனான ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடிசேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

இந்த படத்திற்கு ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

திரைப்படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க உள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதை எதிர்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனுடன் சிந்துபாத், மாமனிதன் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.