‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் - Lanka News Web (LNW)

‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக இயக்குநர் ஆர்.எஸ்.விமல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் "கடாரம் கொண்டான்"திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் தற்போது மகாவீர் கர்ணா படத்தில் இணைந்துள்ளார்.

விக்ரமை கதாநாயகனாக கொண்டு தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் மகாவீர் கர்ணா படத்தைமலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இயக்குகிறார்.

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார்.

ஐதராபாத் ராமோஜி ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து இயக்குநர் ஆர்.எஸ்.விமல், “இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது.

மகாவீர் கர்ணா தொடங்கியது. சிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்‌‌ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

நன்றி கடவுளே” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஐதராபாத்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

இத் திரைப்படம் 32க்கும் மேற்பட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பிரியங்கா சோப்ரா கர்ப்பம்

பிப்ரவரி 21, 2019

பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகரும், நடிகருமான நிக்ஜோனாசுக்கும் காதல்...

மூடப்பட்ட ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்  

பிப்ரவரி 21, 2019

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் காலவரையறையின்றி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்

பிப்ரவரி 21, 2019

ஈராக்-தியாலா மாகாணத்தை சேர்ந்த யுசுப் பத்லே தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 7குழந்தைகள் கிடைத்துள்ளன.

100வருடம் பழமை வாய்ந்த லயன் குடியிருப்பு தாழ்இறங்கும் ஆபாயம்- 12குடும்பங்களை சேர்ந்த 51பேர் இடம்பெயர்வு

பிப்ரவரி 21, 2019

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டின் தோட்டபகுதியில் 100வருடம் பழமை வாய்ந்த 15ம்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

போலிக் கடவுச் சீட்டுக்களுடன் பிரித்தானியா-விற்குள் நுழைந்துள்ள இலங்கையர்கள்

பிப்ரவரி 18, 2019

பெரும்பாலான இலங்கையர்கள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் பயணித்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள...

10 லட்சம் ரூபாவிற்கு உணவு உண்ட நடிகை

பிப்ரவரி 15, 2019

"தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளம்...

100வருடம் பழமை வாய்ந்த லயன் குடியிருப்பு தாழ்இறங்கும் ஆபாயம்- 12குடும்பங்களை சேர்ந்த 51பேர் இடம்பெயர்வு

பிப்ரவரி 21, 2019

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டின் தோட்டபகுதியில் 100வருடம் பழமை வாய்ந்த 15ம்...

தனியார் பேருந்து மின்கம்பத்துடன் மோதியதால் 4 பேர் பலி, 19 பேர் காயம்

பிப்ரவரி 18, 2019

  சிலாபம் - மஹாவெவயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அளவில் இடம்பெற்ற பேருந்து...