காதலை உறுதிப்படுத்த ஜப்பான் செல்லும் அணு-பாஸ் - Lanka News Web (LNW)

காதலை உறுதிப்படுத்த ஜப்பான் செல்லும் அணு-பாஸ்

பாகுபலி திரைப்படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா நிஜ வாழ்க்கையில் ஜோடியாக கூடாதா என எண்ணியவர்கள் பலர். அதை உறுதிபடுத்தும் வகையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் ஜோடி சேர்ந்து அனைத்து நிகழ்விற்கும் செல்வதுடன், இருவரும் அருகிலே அமர்ந்தவண்ணமும் காதல் பார்வைகளை வீசிய வண்ணம் காணப்படுவது அனைவரும் அறிந்ததே.இருவரும் காதலித்து வருவதை இறுதி வரை உறுதி செய்யாத நிலையில் இருவருக்கிடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் பிரபாஸ் தற்போது மெகா பட்ஜெட்டில் தயாராகும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும்  பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கு திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது.

சமீபத்தில் இருவரும் ஜோடியாக தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி இல்ல திருமணத்தில் கலந்துகொண்டது காதலை உறுதிப்படுத்துவதாக இருந்தது என்று பட உலகில் கிசுகிசுத்தனர். 

அனுஷ்கா சமீபத்தில் வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்துவிட்டு வந்தார். மெலிந்த அவரது புதிய தோற்றத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்து ரசிகர்கள் வியந்தனர்.

prabash 01

“ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஒரு நடிகரும், நடிகையும் இணைந்து நடித்தால் அவர்கள் காதலிப்பதாக பேசுவார்கள். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம்” என பிரபாஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். 

இருவரும் சேர்ந்து நடித்துள்ள படங்களை விளம்பரப்படுத்த அங்கு செல்கின்றனர். இதனால் இருவரும் காதலில் மீண்டும் நெருக்கமாகி இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன.

சமீபத்திய செய்திகள்

மே 22, 2019

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…

சமீபத்திய செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை

மே 22, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

மே 22, 2019

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...

அவசர காலச் சட்டம் நீடிப்பு

மே 22, 2019

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

மே 22, 2019

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb