"நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தின் போஸ்டர் - Lanka News Web (LNW)

"நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தின் போஸ்டர்

ஹிந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தல அஜித்குமார் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கி பிரபலமான வினோத் இயக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். அஜித்குமார் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். 3 பெண்கள் ஒரு பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடுகிறார் அஜித்குமார்.

அப்போது அந்த பெண்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன. அவற்றில் இருந்து காப்பாற்றி கோர்ட்டு மூலம் அந்த பெண்களுக்கு எப்படி நியாயம் வாங்கி கொடுக்கிறார் என்பது கதை. இந்த படத்துக்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த நிலையில் திரைப்படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பு வைத்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

அஜித்தின் தோற்றத்தையும் வெளியிட்டனர். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் 2வது போஸ்டர், 3வது போஸ்டர் என்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.

படத்தின் தலைப்பு குறித்து நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறும்போது, “நேர்கொண்ட பார்வை" தலைப்பை பாரதியாரின் பாடலில் இருந்து எடுத்துள்ளனர். அந்த பாடல் புதுமைப்பெண்களை பற்றி பேசியது. படத்துக்கு இதைவிட சிறந்த தலைப்பு இருக்க முடியாது” என்றார்.

Ajith2

சமீபத்திய செய்திகள்

மே 22, 2019

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…

சமீபத்திய செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை

மே 22, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

மே 22, 2019

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...

அவசர காலச் சட்டம் நீடிப்பு

மே 22, 2019

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

மே 22, 2019

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb