அடுத்தடுத்து வரும் நயனின் படங்கள் - Lanka News Web (LNW)

அடுத்தடுத்து வரும் நயனின் படங்கள்

தமிழ் திரையுலகில் 14 ஆண்டுகளாக கொடி கட்டி பறக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

புதிதாக எத்தனையோ கதாநாயகிகள் வந்தும் அவர் மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை. இதுவரை முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த அவர் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

டோரா, அறம், கோலமாவு கோகிலா திரைப்படங்கள் பெரிய கதாநாயகர்கள் திரைப்படங்களுக்கு இணையாக வசூல் குவித்தன. இந்த வருடம் ஆரம்பத்திலேயே அஜித் ஜோடியாக நடித்த "விஸ்வாசம்" திரைப்படம் திரைக்கு வந்து நல்ல லாபம் பார்த்துள்ளது. தற்போது நயன்தாராவின் 3 திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.

அந்தவகையில் ‘ஐரா’ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது. இதில் அவர் இருவேடங்களில் நடித்து இருக்கிறார். திகில் திரைப்படமாக தயாராகி உள்ளது. மே மாதம் 1ம் திகதி "மிஸ்டர் லோக்கல்" திரைப்படமும், அதனை தொடர்ந்து ‘கொலையுதிர் காலம்’ திரைப்படமும் திரைக்கு வர உள்ளன.

இந்த நிலையில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள "லவ் ஆக்‌ஷன் டிராமா" படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.இந்த படம் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையில் வெளியாக இருக்கிறது.

பல சிகிச்சைகளில் சிக்கினாலும் அவற்றை கடந்து முன்னேறி செல்லும் பெண்ணாக நயன்தாரா உள்ளார்.

KK

சமீபத்திய செய்திகள்

மே 22, 2019

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…

சமீபத்திய செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை

மே 22, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

மே 22, 2019

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...

அவசர காலச் சட்டம் நீடிப்பு

மே 22, 2019

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

மே 22, 2019

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb