வில்லனாக மாறும் சிம்பு - Lanka News Web (LNW)

வில்லனாக மாறும் சிம்பு

தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆகா இருப்பவர் நடிகர் சிம்பு. எப்போதுமே சர்ச்சைக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

இவர் இறுதியாக நடித்து வெளியாகிய திரைப்படம் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’. இந்த திரைப்படத்துக்கு எதிர்பாராத அளவுக்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்தாலும் சிம்புவுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தவண்ணம் உள்ளது.

தற்போது ஹன்சிகா நடித்துவரும் ‘மகா’ படத்தில், கௌரவ வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தனது உடல் வாகை பழைய நிலைக்கே கொண்டுவர லண்டனில் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் சிம்பு, ‘மகா’ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு அடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார்.

விரைவில், இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்க உள்ளது. மற்றொரு கதாநாயகன் திரைப்படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறையாகும்.

சமீபத்திய செய்திகள்

மே 22, 2019

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…

சமீபத்திய செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை

மே 22, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

மே 22, 2019

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...

அவசர காலச் சட்டம் நீடிப்பு

மே 22, 2019

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

மே 22, 2019

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb