விவாகரத்துக்கு தயாராகும் ப்ரியங்கா - Lanka News Web (LNW)

விவாகரத்துக்கு தயாராகும் ப்ரியங்கா

திருமணம் ஆன சில மாதங்களில் விவாகரத்து பெறுவது சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கு பழகிய விடயமே.

அந்த வரிசையில் இப்பொழுது பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலித்து கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்து 117 நாட்கள் கடந்துள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

இது ஹிந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் இடையே திருமணத்துக்கு பிறகு சுமுகமான உறவு இல்லை.

வேலை மற்றும் விருந்துக்கு செல்வது உள்ளிட்ட விஷயங்களில் இருவருக்கும் கருத்து ஒற்றுமை இல்லை. தனது கட்டுப்பாட்டில் நிக் ஜோனசை வைத்துக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் பிரியங்காவுக்கு உள்ளது.

திருமணத்துக்கு முன்பு அமைதியானவராக இருந்த பிரியங்கா சோப்ரா இப்போது கோபக்காரராக இருப்பதும் 36 வயது நிரம்பிய அவர் 21 வயது நிக் ஜோனாசுடன் பார்ட்டிகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகிறார் என்று கணவர் குடும்பத்தினர் ஆத்திரத்தில் உள்ளனர்.

இதனால் இருவரும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்று லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விவாகரத்து செய்தியில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான் என்று பிரியங்கா சோப்ரா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக்ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

எங்களின் வேட்பாளர் வெல்வது நிச்சயம் என்கிறார் மகிந்த

ஏப்ரல் 20, 2019

ஜனாதிபதித் தேர்தலல், தங்கள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெறுவது நிச்சயம் என எதிர்க்கட்சித்...

சஜித் - ரவி முரண்பாடு அவர்களது தனிப்பட்ட பிரச்சினை : ஐ.தே.க உறுப்பினர்கள்

ஏப்ரல் 20, 2019

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் உப தலைவர்...

கோதாபய தேர்தலில் போட்டியிடுவார் என்ற அச்சத்தில் வழக்கு போடுகின்றனர்

ஏப்ரல் 20, 2019

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கம் - மக்கள் எச்சரிக்கை

ஏப்ரல் 20, 2019

அடுத்த சில நாட்களுக்கு தற்போது காணப்படும் மழையுடனான வானிலை பலத்த மின்னல் தாக்கத்துடன்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

சித்திரா பௌர்ணமி

ஏப்ரல் 19, 2019

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்?

ஏப்ரல் 15, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

இலங்கையில் திருடுபவர்களைவிட திருடரைப் பிடிப்போருக்கு நல்ல வருமானமாம்!

ஏப்ரல் 15, 2019

தற்போது இலங்கையில் மிகவும் இலாபமான வியாபாரம் திருடுவது அல்ல எனவும், அந்தத் திருடர்களைப்...

கட்சி தாவல்களினால் அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

ஏப்ரல் 15, 2019

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள்...