உதிரிப்பூக்கள் உதிர்ந்தது

உதிரிப்பூக்கள் உதிர்ந்தது

2 April 2019 07:00 am

பிரபல இயக்குனரும் நடிகருமான ஜெ.மகேந்திரன் தனது 79வது வயதில் இன்று காலமானார்.

சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முள்ளும் மலரும், ஜானி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் 1979ம் ஆண்டு இவர் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படம் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஜெ.மகேந்திரன் அவர்கள் விஜய்யின் தெறி, விஜய் சேதுபதியின் சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

mahendranmahendran