கர்ப்பமடைந்த எமி

கர்ப்பமடைந்த எமி

7 April 2019 12:00 pm

மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

இளைய தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்து விட்டார்.

இந்த நிலையில் நடிகை ஏமி ஜாக்சன் லண்டன் கோடீஸ்வர தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோட்டோவை காதலித்து, இந்த ஆண்டு தொடக்கத் தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஏமி ஜாக்சன் தனது இணையதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். திருமணம் ஆகாத நிலையில் ஏமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததை கண்டு ரசிர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில்,’நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே 6 வாரங்களுக்கு தெரியாது. அதன்பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் வி‌ஷயம் தெரிந்தது.

இந்த வி‌ஷயம் தெரிந்தவுடன் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். மேலும் நான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுற்றி வருகிறேன். மகனோ அல்லது மகளோ பிறந்தால் என்னுடன் உலகை சுற்றுவார்கள்’ என்று கூறி இருக்கிறார்.