பக்கா நாயகனின் தம்பிக்கு நிக்கா

பக்கா நாயகனின் தம்பிக்கு நிக்கா

8 April 2019 11:00 am

லிட்டல் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனின் தம்பியும்,இயக்குனர் டி.ராஜேந்தரின் இளைய மகனுமான குறளரசனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். மேலும் இவருடன் குறளரசனும் சென்றிந்தார்.

சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய குரளரசன், இஸ்லாமிய பெண் ஒருரை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்.

இதேவேளை தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தை சந்தித்து டி.ராஜேந்தர் அழைப்பிதழை வழங்கியிருந்தார்.

இதேவேளை அண்ணன் சிம்பு இருக்கும் போது தம்பிக்கு திருமணம் நடைபெறுவதனால் சினிமா வட்டாரங்களில் சில பல வதந்திகள் வெளியாகியவண்ணம் உள்ளது.

சிம்பு நயன்தாரா ஹன்சிகா என பலரை காதலித்தமை குறிப்பிடத்தக்கது.