வரலாற்று நாயகனாகும் தனுஷ்
Monday, 25 May 2020

வரலாற்று நாயகனாகும் தனுஷ்

4 May 2019 12:30 pm

தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். ஆரம்பகாலத்தில் இருந்து தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட இவர் நடிப்பில் அடுத்ததாக "எனை நோக்கி பாயும் தோட்டா" திரைப்படம் வெளிவரவுள்ளது.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். ராம்குமார், கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சரித்திர படமொன்றையும் இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் தொடராக வந்த வேள்பாரி கதையில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.

சு.வெங்கடேசன் எழுத்தில் வேள்பாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி வந்த இந்த நாவலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இயற்கைக்கும், மனித பேராசைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதை, ‘வேள்பாரி’ என்பது குறிப்பிடத்தக்கது.