மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்
Wednesday, 27 May 2020

மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்

9 May 2019 01:00 pm

சிம்புவின் "வாலு", விக்ரமின் "ஸ்கெட்ச்" ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் விஜய் சந்தர்.

இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து "சங்கத்தமிழன்" என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது உண்மையாகும் பட்சத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வனுடன் நாசர், சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

KK