விசித்ரா வாழ்க்கையை கெடுத்தது சத்தியராஜா!
Monday, 25 May 2020

விசித்ரா வாழ்க்கையை கெடுத்தது சத்தியராஜா!

14 May 2019 10:05 am

தமிழ் சினிமா உலகில் 90களில் தனது அழகாலும், நடிப்பாலும், தனது நடன திறமையாலும் அனைவரினதும் மனங்களை வென்றவர் நடிகை விசித்ரா.

இவர் முத்து, ரசிகன்,அமராவதி என பல படங்களில் நடித்துள்ளார். விசித்ரா மீண்டும் சினிமாவில் கால்வைக்கவுள்ளார்.

மீண்டும் நடிப்பது குறித்து விசித்ரா கூறும்போது, “நான் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். 18 வருடங்களுக்கு முன்னால் நடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்கள் வருகின்றன. எனக்கும் நடிக்க அழைப்பு வருகிறது. வலுவான குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக கதைகள் கேட்டு வருகிறேன்” என்றார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், “தமிழில் நீங்கள் முன்னணி நடிகையாக வந்து இருக்க வேண்டியது. சத்யராஜால் அது போய்விட்டது” என்று கருத்து பதிவிட்டார்.

இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள விசித்ரா, “எனது நடிப்பு திறமையின் மீது சத்யராஜ் எப்போதும் நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் இயக்குனராக அறிமுகமான ‘வில்லாதி வில்லன்’ படத்திலும் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து இருந்தார்.

அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் ஒரே மாதிரி கதையம்சத்தில் வெளியான படங்கள் என்னை நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்யவிடாமல் தடுத்துவிட்டன, வேறு யாரும் தடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

KK