கொச்சிக்கடை மற்றும் மீகமுவ தேவாலயங்களில் வெடிப்பு

கொச்சிக்கடை மற்றும் மீகமுவ தேவாலயங்களில் வெடிப்பு

21 April 2019 04:56 am

கொழும்பு கொச்சிக்கடை சாந்த அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் காரணமாக 8 நபர்களுக்கும் மேலதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பு சம்பவத்தினால் சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற வேளையில் இதனை பொலிஸார் மற்றும் வைத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

இதேவேளை நீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்கலான சங்கரிலா மற்றும் சினமன் ஹோட்டல்களிலும் மேலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.