தெற்கில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தைகள் மரணத்திற்கு காரணம் நியூமோனியா!

தெற்கில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தைகள் மரணத்திற்கு காரணம் நியூமோனியா!

17 May 2018 12:17 pm

கடந்த சில மாதங்களாக கராபிட்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் ஐந்து குழந்தைகள் உயிரிழந்தமை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு விசேட வைத்தியர் அருண டி சில்வா தெரிவித்துள்ளார்.

தெற்கில் நியூமோனியா நோய் தற்போது பரவலாக காணப்படுவதாகவும் மூன்று வயதுக்கு குறைந்த குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இன்புலன்சா மற்றும் எடினோ ஆகிய வைரஸினால் இந்த நியூமோனியா உருவாகியுள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நோயில் இருந்து குழந்தைகளை பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.