மூன்று பிள்ளைகளுடன் தாயும் தற்கொலை : வவுனியாவில் சோகம்

மூன்று பிள்ளைகளுடன் தாயும் தற்கொலை : வவுனியாவில் சோகம்

21 June 2018 05:01 am

வவுனியாவில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (புதன்கிழமை) காலை வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் – 3 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன் காலை வேலைக்கு சென்ற நிலையில், மனைவி தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு மருந்தினை சோடாவுடன் கலந்து வழங்கியதுடன், தானும் அதனை அருந்தியுள்ளார்.

இதன்போது இரண்டாவது மகனான 6 வயதுச் சிறுவன் தனது அம்மம்மாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா சோடாவுடன் ஏதோ கலந்து தந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் அவர்கள் நால்வரையும் மீட்டுச் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.