7 மாதங்களாக கொடுப்பனவு இல்லை - 6 தோட்ட அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் - Lanka News Web (LNW)

7 மாதங்களாக கொடுப்பனவு இல்லை - 6 தோட்ட அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

பதுளை - மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இநத நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட், தெரேசியா, மோரா, கிவ், சென்ஜோன்டிலரி, கிலானி ஆகிய பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த வெளிகள உத்தியோகத்தல்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் சுமார் 07மாதங்களாக மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரதிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ - டின்சின் நகரில் இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்தின் கிழ் பணிபுரியும் தமக்கு எவ்வித அறிவிப்புகளும் இன்றி வழங்கபட வேண்டிய மேலதி கொடுப்பனவுகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆயிரம் கொடு : போராட்டம் தொடர்கிறது

பிப்ரவரி 23, 2019

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா பெற்றுத்தரக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்...

ரத்கம வர்த்தக் கொலையுடன் பொலிஸ் அதிகாரிக்கும் தொடர்பு?

பிப்ரவரி 23, 2019

ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்தில் கடந்த ஜனவரி 23ஆம் திகதி கடத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட இளம்...

அரசாங்க வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்கிறார் மாவை

பிப்ரவரி 23, 2019

போரின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை கட்டிகொடுப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும்...

முதலீடுகளை செய்ய அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு

பிப்ரவரி 23, 2019

மின்சக்தி மற்றும் வர்த்தகத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பை மின்சக்தி மற்றும்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

போலிக் கடவுச் சீட்டுக்களுடன் பிரித்தானியா-விற்குள் நுழைந்துள்ள இலங்கையர்கள்

பிப்ரவரி 18, 2019

பெரும்பாலான இலங்கையர்கள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் பயணித்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள...

100வருடம் பழமை வாய்ந்த லயன் குடியிருப்பு தாழ்இறங்கும் ஆபாயம்- 12குடும்பங்களை சேர்ந்த 51பேர் இடம்பெயர்வு

பிப்ரவரி 21, 2019

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டின் தோட்டபகுதியில் 100வருடம் பழமை வாய்ந்த 15ம்...

தனியார் பேருந்து மின்கம்பத்துடன் மோதியதால் 4 பேர் பலி, 19 பேர் காயம்

பிப்ரவரி 18, 2019

  சிலாபம் - மஹாவெவயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அளவில் இடம்பெற்ற பேருந்து...

மூடப்பட்ட ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்  

பிப்ரவரி 21, 2019

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் காலவரையறையின்றி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.