மதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்

மதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்

26 August 2018 06:45 am

மன்னார் மூர்வீதி – காட்டுபள்ளி பிரதான வீதியில் புனரமைப்பு செய்யப்பட்ட குளத்திற்கு அண்மையில் பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இருக்கைகள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டுக்காக கட்டப்பட்ட அனைத்தும் சேதமாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் “அபிவிருத்திக்கான ஒன்றிணைவு” எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மன்னார் மூர்வீதி, காட்டுபள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள குளம் புனரமைப்பு செய்யப்பட்டு தற்போது அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளும் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இவ்வாறு அமையப்பெற்ற குறித்த இடம் தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இரவில் இனந்தெரியாத நபர்கள் மதுபோதையில் வந்து அட்டகாசம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி சேதமாக்கப்பட்டுள்ளவற்றை மீண்டும் அமைத்து குறித்த பகுதியில் உரிய பராமரிப்புக்களை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.