ஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி
Sunday, 15 Dec 2019

ஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி

16 September 2018 05:45 pm

ஓமந்தையில் இன்று காலை கார் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

இந்த விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையொன்றில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.