பேருந்து சாரதி-களுக்கிடையில் மோதல்
Saturday, 07 Dec 2019

பேருந்து சாரதி-களுக்கிடையில் மோதல்

17 September 2018 10:16 am

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் யாழில் இருந்து அக்கரைபற்று நோக்கி சென்ற களுவாஞ்சிக்குடி சாலைக்கு சொந்தமான அரச பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தரித்து நின்றதுடன் புறப்படுவதற்கும் தயாரானது.

இதன்போது வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்து அக்கரைபற்று நோக்கி செல்ல தனியார் பேருந்து ஒன்றும் தயாராகிய நிலையில் குறித்த இடத்தில் பயணிகளை ஏற்றிகொண்டருந்த போது, இரண்டு பேருந்து சாரதிகள் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு பேருந்துகளும் முட்டி மோதியதால் தனியார் பேருந்தின் ஒருபக்க கண்ணாடி உடைந்துள்ளது. இதனால் மேலும் குழப்பம் ஏற்பட்டு கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த கைகலப்பில் காயமடைந்த அரச பேருந்தின் நடத்துனர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் குறித்த இரு பேருந்துகளையும் பயணிகளுடன் வவுனியா பொலிஸ்நிலையம் அழைத்துசென்று முறைப்பாடுகளை பதிவுசெய்து விட்டு பயணிகளை வேறு ஒரு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை அரச பேருந்து சாரதியை தாக்கியதாக கூறி தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தினால் தமக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி, வவுனியா சாலையின் அரச பேருந்துகள் சில பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.