வவுணதீவில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பொலிஸார்!

வவுணதீவில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பொலிஸார்!

30 November 2018 02:32 am

வவுணதீவு பிரதேச சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.