மட்டு -பெரும்போக நெற்செய்கையில் சிறந்த விளைச்சல்
Saturday, 07 Dec 2019

மட்டு -பெரும்போக நெற்செய்கையில் சிறந்த விளைச்சல்

9 January 2019 07:53 am

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையின் மூலம் இம்முறை சிறந்த விளைச்சல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,75,000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெற்செய்கைகள் சிறந்த முறையில் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகளை அறிவித்துள்ளனர்.

பொரும்போக நெற்செய்கைக்கு நன்மை தரும் வகையில் காலநிலை காணப்பட்டதனால் சிறந்த விளைச்சல் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 16 போதனாசிரியர் பிரிவுகளில் பொரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.