நான்கு நாட்களாக 40 பேரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட யுவதி

நான்கு நாட்களாக 40 பேரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட யுவதி

21 July 2018 02:54 am

இளம் பெண்ணொருவரை 40 பேர் சேர்ந்த பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவமொன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹரியாணா மாநிலத்திற்கு வேலைவாய்ப்புக்களை தேடி சென்ற யுவதி ஒருவரே இவ்வாறு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா மாவட்டத்திலுள்ள மோர்ஹிணி - ஹில்ஸ் பகுதிக்கு, சண்டிகாரைச் சேர்ந்த யுவதியொருவர் வேலைவாய்ப்புக்களை தேடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வேலைவாய்ப்புக்களை தேடி சென்ற யுவதிக்கு, வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக தெரிவித்த ஒருவர், குறித்த யுவதியை நட்சத்திர விடுதியொன்றிற்கு அழைத்து சென்றுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட யுவதியை, 40 பேர் இணைந்து, நான்கு நாட்களாக அறையொன்றிற்கு பூட்டி வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த யுவதி பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சண்டிகாருக்கு மீள திரும்பிய யுவதி, தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் பெற்றோருக்கு கூறியுள்ளார்.

அதன்பின்னர் பெற்றோர் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அந்த நாட்டு காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.