கோயில் உண்டியல்கள் தொடர்பில் மஹிந்தவிற்கு ஏற்பட்டுள்ள கவலை

கோயில் உண்டியல்கள் தொடர்பில் மஹிந்தவிற்கு ஏற்பட்டுள்ள கவலை

28 July 2018 08:07 am

அரசாங்கம் கோயில் உண்டியல்களுக்கும் வரி விதிக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் நாட்களில் இந்த அரசாங்கம் கோயில் உண்டியல்களுக்கும் வரி விதிக்கக்கூடும். நாம் இந்த அரசாங்கத்திடம் அடிக்கடி வரி விதிப்பது குறித்தே கேள்வி எழுப்புகின்றோம்.

மக்களுக்கு ஆரோக்கியமான விடயங்களை இந்த அரசாங்கத்தின் பக்கமிருந்து கேட்க கிடைப்பதில்லை. இவ்வாறு வரி விதித்தால் மக்கள் எதிர்நோக்க நேரிட கூடிய நிலைமைகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நாட்டு மக்கள் உரிய முறையில் உரிய பதில்களை இந்த அரசாங்கத்திற்கு அளிப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.