நாயால் வந்த வினை: சுங்க அதிகாரிகள் ஐவர் மீது தாக்குதல்

நாயால் வந்த வினை: சுங்க அதிகாரிகள் ஐவர் மீது தாக்குதல்

28 July 2018 12:20 pm

கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்ட குவைத் நாட்டு தம்பதியினரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த தம்பதியினர், விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஐவர் மீது தாக்குதல் நடத்தியதாக கைதுசெய்யப்பட்டனர்.

செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, கடும் ஆத்திரமடைந்த குவைத் நாட்டு தம்பதியினர், பிரதி பணிப்பாளர், பெண் ஊழியர் உள்ளிட்ட 5 சுங்க அதிகாரிகளை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஐவரும் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், இலங்கையின் விலங்கு கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைக்கு இணங்க எதுவித தயார் நிலையிலும், அவர்கள் வருகை தரவில்லை என குறிப்பிட்டுள்ள பொலிஸார், இச்சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.