தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது விழா - Lanka News Web (LNW)

தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது விழா

91வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகமே உற்று நோக்கும் 91வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வருகிற 24ம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

எவரல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும்.

அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார்.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், தான் ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்தார்.

இந்த நிலையில், 91வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆயிரம் கொடு : போராட்டம் தொடர்கிறது

பிப்ரவரி 23, 2019

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா பெற்றுத்தரக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்...

ரத்கம வர்த்தக் கொலையுடன் பொலிஸ் அதிகாரிக்கும் தொடர்பு?

பிப்ரவரி 23, 2019

ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்தில் கடந்த ஜனவரி 23ஆம் திகதி கடத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட இளம்...

அரசாங்க வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்கிறார் மாவை

பிப்ரவரி 23, 2019

போரின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை கட்டிகொடுப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும்...

முதலீடுகளை செய்ய அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு

பிப்ரவரி 23, 2019

மின்சக்தி மற்றும் வர்த்தகத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பை மின்சக்தி மற்றும்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

போலிக் கடவுச் சீட்டுக்களுடன் பிரித்தானியா-விற்குள் நுழைந்துள்ள இலங்கையர்கள்

பிப்ரவரி 18, 2019

பெரும்பாலான இலங்கையர்கள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் பயணித்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள...

100வருடம் பழமை வாய்ந்த லயன் குடியிருப்பு தாழ்இறங்கும் ஆபாயம்- 12குடும்பங்களை சேர்ந்த 51பேர் இடம்பெயர்வு

பிப்ரவரி 21, 2019

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டின் தோட்டபகுதியில் 100வருடம் பழமை வாய்ந்த 15ம்...

தனியார் பேருந்து மின்கம்பத்துடன் மோதியதால் 4 பேர் பலி, 19 பேர் காயம்

பிப்ரவரி 18, 2019

  சிலாபம் - மஹாவெவயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அளவில் இடம்பெற்ற பேருந்து...

மூடப்பட்ட ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்  

பிப்ரவரி 21, 2019

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் காலவரையறையின்றி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.