100 கோடி பேர் பதிவிறக்கம் செய்த "டிக் டாக்" - Lanka News Web (LNW)

100 கோடி பேர் பதிவிறக்கம் செய்த "டிக் டாக்"

சமூக வலைதள செயலியான "டிக் டாக் ஆண்ட்ராய்டு" மற்றும் "ஐ.ஓ.எஸ்" ஆகியன இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

முகப்புத்தகம் தொடங்கி தற்பொழுது டிக் டாக் தற்பொழுது மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது.

அனைவரும் தமது ஒய்வு நேரங்களில் மட்டுமில்லாமல் தம் மனதை எப்போதும் செழிப்பாக வைத்துக்கொள்ள இதை பயன்படுத்துகிறார்கள்.

டிக்டாக்கை இயங்குதளங்களில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். பைட்டான்ஸ் எனும் சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் பேஸ்புக்கிற்கு போட்டியாக அமைந்துள்ளது.

வீடியோ சார்ந்த செயலிகளில் இந்த செயலி ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பின்தள்ளியிருக்கிறது.

100 கோடி டவுன்லோட்களில் டிக்டாக் பல்வேறு மொழி வேரியண்ட்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 100 கோடி டவுன்லோட்களில் சீன சந்தையை சேர்ந்த ஆண்ட்ராய்டு சாதனங்களின் எண்ணிக்கை அடங்காது.

அந்த வகையில் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். 100 கோடி டவுன்லோடுகளை சென்சார் டவர் ஸ்டோர் இன்டெலிஜன்ஸ் எனும் ஆப் அனாலடிக்ஸ் தளம் முதலில் அறிவித்தது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டிக்டாக் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் 2018 வரை மொத்தம் 66.3 கோடி பேர் டவுன்லோடு செய்திருந்தனர். இதே ஆண்டில் பேஸ்புக் செயலியை சுமார் 71.1 கோடி பேரும், இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 44.4 கோடி பேர் டவுன்லோடு செய்தனர்.

2018 ஆம் ஆண்டு டிக்டாக் செயலி அதிகளவு பிரபலமாகி அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகளில் நான்காவது இடம் பிடித்தது.

ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் அதிக இன்ஸ்டால்களை பெற்ற செயலிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இத்துடன் அமெரிக்காவில் கேமிங் இல்லாத செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

மே 22, 2019

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…

சமீபத்திய செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை

மே 22, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

மே 22, 2019

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...

அவசர காலச் சட்டம் நீடிப்பு

மே 22, 2019

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

மே 22, 2019

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb