திப்பு சுல்தானின் அரிய பொருட்கள் ஏலத்தில் - Lanka News Web (LNW)

திப்பு சுல்தானின் அரிய பொருட்கள் ஏலத்தில்

இங்கிலாந்தில் திப்பு சுல்தானின் அரிய பொருட்கள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் அவர் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி பதித்த வாள், அரிய வகை துப்பாக்கி மற்றும் சில போர் வாள்கள் அடங்கிய 8 அரிய பொருட்களை மேஜர் தாமஸ் ஹார்ட் என்பவர் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றார்.

இந்த கலைப்பொருட்கள் அனைத்தும் பல்வேறு தலைமுறையினரை கடந்து, 220 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் பெர்க்சைர் நகரை சேர்ந்த ஒரு தம்பதியின் கையில் சமீபத்தில் கிடைத்தது.

அந்த தம்பதி தங்களது பழமையான வீட்டின் பரணைச் சுத்தம் செய்தபோது, திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கவசத்தாலான வாள், துப்பாக்கி உள்ளிட்ட 8 பொருட்களை கண்டெடுத்தனர்.

அதனை தொடர்ந்து அந்த தம்பதி துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை ‘ஆண்டனி கிரிப் ஆர்ம்ஸ்-ஆர்மர்’ எனப்படும் தனியார் ஏல நிறுவனத்திடம் அவற்றை கொடுத்தனர்.

இதையடுத்து திப்பு சுல்தான் பயன்படுத்திய 8 பொருட்களும் மார்ச் 26ம் திகதி ஏலத்தில் விடப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது.

திருடப்பட்ட கலைப்பொருட்களை கண்டுபிடித்து மீட்டெடுக்க உதவும் தன்னார்வ அமைப்பான ‘இந்தியா பிரைட் புராஜக்ட்’ என்ற அமைப்பு இதுபற்றி இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்தியது.

அதனை தொடர்ந்து, ஏலத்தை நிறுத்திவைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனாலும் திட்டமிட்டபடி அந்நிறுவனம் ஏலத்தை நடத்தியது. இதில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வெள்ளி பொருத்தப்பட்ட அரிய வகை துப்பாக்கி 60 ஆயிரம் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.55 லட்சத்து 20 ஆயிரம்) ஏலம் போனது.

அதேபோல் திப்பு சுல்தானின் தங்கக் கைப்பிடி பதித்த வாள் மற்றும் வாளை பொருத்தி வைக்கும் உறையுடன் கூடிய பெல்ட் ஆகியவை 18 ஆயிரத்து 500 பவுண்டுக்கு (ரூ.17 லட்சத்து 2 ஆயிரம்) ஏலத்தில் எடுக்கப்பட்டன.

ஒட்டுமொத்தமாக திப்பு சுல்தானின் 8 அரிய பொருட்கள் 1 லட்சத்து 7 ஆயிரம் பவுண்டுக்கு (ரூ.98 லட்சத்து 40 ஆயிரம்) ஏலம் போனது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

எங்களின் வேட்பாளர் வெல்வது நிச்சயம் என்கிறார் மகிந்த

ஏப்ரல் 20, 2019

ஜனாதிபதித் தேர்தலல், தங்கள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெறுவது நிச்சயம் என எதிர்க்கட்சித்...

சஜித் - ரவி முரண்பாடு அவர்களது தனிப்பட்ட பிரச்சினை : ஐ.தே.க உறுப்பினர்கள்

ஏப்ரல் 20, 2019

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் உப தலைவர்...

கோதாபய தேர்தலில் போட்டியிடுவார் என்ற அச்சத்தில் வழக்கு போடுகின்றனர்

ஏப்ரல் 20, 2019

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கம் - மக்கள் எச்சரிக்கை

ஏப்ரல் 20, 2019

அடுத்த சில நாட்களுக்கு தற்போது காணப்படும் மழையுடனான வானிலை பலத்த மின்னல் தாக்கத்துடன்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

சித்திரா பௌர்ணமி

ஏப்ரல் 19, 2019

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்?

ஏப்ரல் 15, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

இலங்கையில் திருடுபவர்களைவிட திருடரைப் பிடிப்போருக்கு நல்ல வருமானமாம்!

ஏப்ரல் 15, 2019

தற்போது இலங்கையில் மிகவும் இலாபமான வியாபாரம் திருடுவது அல்ல எனவும், அந்தத் திருடர்களைப்...

கட்சி தாவல்களினால் அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

ஏப்ரல் 15, 2019

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள்...