சர்வதேச குழந்தைகளின் புத்தக நாள்

சர்வதேச குழந்தைகளின் புத்தக நாள்

2 April 2019 09:00 am

இன்று சர்வதேச குழந்தைகளின் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது.

வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாகின்றது.அது குழந்தைகளையும் சாரும். தற்போது வளர்ந்து வரும் சமூகத்தின் இடையில் புத்தகம் வாசிப்பு அரிதான விடயமாகிவிட்டது.

இளமையில் கல் சிலையில் எழுத்து என்பது போல சிறுவயதில் இருந்து புத்தகங்கள் வாசிக்கும் போது மூளை சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2ம் திகதி சர்வதேச குழந்தைகளின் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.

"இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தலுடன், குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தலும் ஆகும்.

குழந்தை கருவில் இருக்கும் போதே தாய் புத்தகங்களை தேடி வாசிக்கிறாள். ஆனால் தற்போது பிறக்கும் குழந்தைகள் ஸ்மாட் போனுடன் தான் பிறக்கிறது.

எனவே குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழிகாட்டுவது பெரியவர்களின் கடமையாகும். இன்றைய நாளிலாவது நல்ல புத்தகங்களை வாங்கி கொடுத்து குழந்தைகளை வாசிப்பு பழக்கத்திற்கு அடிமையாக்குவோம்.