நீங்களும் வலிமை பெற நினைப்பவரா? எச்சரிக்கை
Monday, 25 May 2020

நீங்களும் வலிமை பெற நினைப்பவரா? எச்சரிக்கை

9 May 2019 12:00 pm

வலிமையான உடல் கட்டமைப்பை கொண்டிருக்க ஆண்களோ பெண்களோ கண்டிப்பாக விரும்புவார்கள். அதில் திருமணமானவர்கள் இந்த விடயத்தில் அதிகம் நாட்டம் செலுத்துகிறார்கள்.

அந்தவகையில் மங்கோலியா நாட்டில் வசிக்கும் தம்பதியினர் உடல் வலிமையினை அதிகரிப்பதற்காக செய்த செயல் விபரீதமாக முடிந்தது.

மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது. இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், "மர்மூத்" எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை உட்கொண்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும்போது இருவருக்கும் அடைப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் இரண்டு தினங்களில் ஆண் இறந்து விட்டார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர்.

மங்கோலியா நாட்டில் வசிக்கும் சிலர் அணிலை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் வலிமை வேண்டும் என எண்ணி நம்மில் பலர் பலவிதமான செயல்களை மேற்கொள்வார்கள். அதிலும் சிலர் வேலைத்தளங்களில் யாரும் கூறும் டிப்ஸ், அருகில் இருப்பவர்கள் கூறும் டிப்ஸ் என அனைத்தையும் கையாள்வார்கள். இதில் பலருக்கு விபரீதமான செயல்கள் நடைபெறுகிறது.

எனவே உடல் வலிமை பெறுவது தொடர்பில் வைத்தியரின் உதவியை நாடுவதே சிறந்த முறையாகும்.