ஒட்டிக் கட்டிக்கொண்டதால் இவ்வளவு விலையா?
Monday, 25 May 2020

ஒட்டிக் கட்டிக்கொண்டதால் இவ்வளவு விலையா?

10 May 2019 08:59 am

உலகில் நிமிடத்துக்கு நிமிடம் அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

அந்தவகையில் தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் (Bangkok) இந்த அதிசயம் நடந்துள்ளது.

நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.

இந்த ஆமை சமீபத்தில் முட்டைகளை இட்டு, குஞ்சு பொறித்துள்ளது. அதில் ஒன்று ‘அல்பினோ’ எனப்படும் நிறம் அற்ற, இரு தலைகள் கொண்ட அபூர்வப் பிறவியாகப் பிறந்துள்ளது.

நூன் அவ்ஸானியிடம் இருக்கும் அந்த அரியவகை ஆமை குறித்து, சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

இதை கேள்விப்பட்ட ஏராளமானோர் நூன் அவ்ஸானி வீட்டுக்கு சென்று அந்த ஆமையை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

இதற்கிடையே நூன் அஸ்வானி இந்த ஒட்டி பிறந்த ஆமையை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.22 லட்சத்துக்கு விற்க முடிவு செய்துள்ளார்.

எனினும் இந்த ஆமை நிறம் அற்றதாக பிறந்திருப்பதால் நீண்டகாலம் வாழாது என நினைத்து, அதனை வாங்க அனைவரும் தயக்கம் காட்டுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 two headed albino turtle 1two headed albino turtle 1

KK