மருத்துவமே பார்க்காமல் மரணித்த மா மனிதர்

மருத்துவமே பார்க்காமல் மரணித்த மா மனிதர்

16 May 2019 11:52 am

நமக்கு வாழ்க்கையில் எல்லா விடயத்திலும் முதலிடம் வருவதென்றால் பிடிக்கும்.

இவரும் உலகின் மிக வயதான மனிதர் பட்டியலில் முதலிடம்  அதாவது சாதனை படைத்தவர்.

ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், உலகின் மிக வயதான மனிதர்.

123 வயதில் அப்பாஸ் இலியிவ், காலமானார்.1896ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் இலியிவ் பிறந்தவர்.

1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.

அத்துடன் மது, புகை போன்ற எந்த போதை பழக்கத்துக்கும் அடிமையாகாத இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது.

அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

KK

old man 1

old man 2

Old man 3