இங்கிலாந்து - குரேசியா அணிகள் அரையிறுதிக்கு தெரிவு - Lanka News Web (LNW)

இங்கிலாந்து - குரேசியா அணிகள் அரையிறுதிக்கு தெரிவு

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 2 - 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 1966 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவீடன் - இங்கிலாந்து அணிகளும் மோதிய போட்டிகளில் இதுவரை இங்கிலாந்து அணி 8 போட்டிகளிலும், சுவீடன் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. நேற்று (07) இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யா - குரோஷியா அணிகள் மோதிக் கொண்டன.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் ரஷ்யா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷ்யா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷ்யா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன. இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100 ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115 ஆவது நிமிடத்தில் ரஷ்யா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

முதலில் ரஷ்யாவின் வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணி முதல் வாய்ப்பில் கோல் போட்டது. இரண்டாவது வாய்ப்பை ரஷ்யா கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷ்யா கோல் கீப்பர் தடுத்துவிட்டார். இதனால் மீண்டும் 1 - 1 என சமனானது.

மூன்றாவது வாய்ப்பை ரஷ்யா வீணாக்கியது. குரோஷியா மீண்டும் கோலாக்கியது. இதனால் 1-2 என முன்னிலை பெற்றது. நான்காவது வாய்ப்பில் ரஷ்யாவும், குரோஷியாவும் கோல் அடித்ததால் 2-3 என முன்னிலை பெற்றது.

இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை பயன்படுத்தி ரஷ்யா கோல் போட்டதால் 3-3 என சமனானது. இறுதிவாய்ப்பில் குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்ததால் 4-3 என வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

தன்னம்பிக்கையுள்ள இளைஞர்கள் உருவாக வேண்டும் : சண் குகவரதன்

செப்டம்பர் 18, 2018

தன்னம்பிக்கையுள்ள இளைஞர்கள் உருவாக வேண்டும் எனவும், இவர்களே எதிர்காலத்தின் தலைசிறந்த தலைவராக இருப்பார்கள்...

வாழ்வா சாவா போராட்டத்தில் இலங்கை தமிழ் கைதிகள்

செப்டம்பர் 18, 2018

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம்...

ஆஸ்திரியா விடயம் குறித்து வாய் திறந்த ஜனாதிபதி

செப்டம்பர் 18, 2018

தனது தொலைபேசி அழைப்பை எடுக்காத ஆஸ்திரியாவுக்கான இலங்கை தூதுவர் உள்ளிட்ட பிற தூதுவர்களை...

எரிபொருள் புகையிரதம் விபத்து; கருவுற்ற யானை உள்ளிட்ட 3 யானைகள் பலி

செப்டம்பர் 18, 2018

புகையிரதமொன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று யானைகள் பலியாகியுள்ளன. புகையிரதமொன்று யானைகளுடன் மோதி...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

கண்டியை ஆண்ட இறுதி மன்னனின் கதைகூறும் கிரிவெசிபுர

செப்டம்பர் 14, 2018

கண்டி இராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான ஸ்ரீவிக்ரம இராஜசிங்கவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...

கெசல்கமுவ ஓயாவை அழிக்கும் தனியார் மின்உற்பத்தி நிலையம் யாருடையது?

செப்டம்பர் 11, 2018

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெம்பியன்- எல்டொப் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனியார் நீர்...

நாய் கூட சாப்பிட முடியாத உணவை ஜனாதிபதிக்கு கொடுத்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

செப்டம்பர் 11, 2018

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சை...

ஒஸ்திரியா தூதுவராலய அதிகாரிகளை உடனே நாட்டுக்கு அழைத்துள்ள ஜனாதிபதி!

செப்டம்பர் 15, 2018

ஒஸ்திரியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அனைவரையும் நாட்டுக்கு திரும்பி வருமாறு ஜனாதிபதி...