சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மை – அனுபமா பரமேஸ்வரன்

சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மை – அனுபமா பரமேஸ்வரன்

19 September 2018 05:17 am

சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான் என்றும், ஆனால் தான் அதை எதிர்கொள்ளவில்லை என்று அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக நடிகைகள் தைரியமாக பேச ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் சமீபத்தில் ஸ்ரீரெட்டி ஒரு பட்டியலையே வெளியிட்டார்.

ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் புகாரில் சிக்கி உள்ளனர்.

இப்போது நடிகை அனுபமா பரமேஸ்வரனும் சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக கூறியுள்ளார்.

இவர் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தவர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கன்னட படத்திலும் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் வழங்கியுள்ள பேட்டியிலே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் இருப்பது உண்மைதான். ஆனாலும் நான் அதில் சிக்கவில்லை.

அதுமாதிரியான பிரச்சினைகள் இப்போதுவரை எனக்கு ஏற்படவில்லை. திரைப்படங்களில் நடிக்க நிறைய புதுமுக நடிகைகள் வருகிறார்கள். அவர்கள் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளை சந்திக்க நேர்கிறது.

பாலியல் தொல்லைகளை ஏற்றுக்கொள்வதை தடுக்கும்வரை அவற்றை தடுக்க முடியாது என்பது எனது கருத்து. என்னைச் சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்மீது அன்பு செலுத்துகிறார்கள். மரியாதையும் கொடுக்கிறார்கள். எனவே எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

மொடர்னாக இருப்பதிலும், குட்டை பாவாடை அணிவதிலும் அழகு இல்லை. திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதில்தான் அழகு இருக்கிறது.

சினிமா துறையில் நடிகைகளுக்குள் போட்டி இருக்க வேண்டும். அதுதான் நடிகைகளுக்கான சிறந்த ஊக்க சக்தி” என அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.