ரசிகர்களின் விமர்சனங்களால் காட்சிகள் நீக்கம்!

ரசிகர்களின் விமர்சனங்களால் காட்சிகள் நீக்கம்!

30 September 2018 05:16 am

புதுப்படங்களின் டிரைலரில் வரும் காட்சிகள், வசனங்களை ரசிகர்கள் கிண்டல் செய்து வருவதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் நீக்கி வருகின்றனர்.

இதற்கு உதாரணமாக மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியிருக்கும் செக்கச்சிவந்த வானம் பட டிரெய்லரில் ஜோதிகா, அரவிந்த்சாமியை பார்த்து யுத்தம் தான் என்று முடிவு பண்ணீட்டீங்கள்ல? என்று கேட்கும் காட்சி இடம்பெற்றது.

ஆனால் அதற்கு மீம்ஸ்கள் வெளியானதால் படத்தில் அந்த காட்சியோ, வசனமோ இடம்பெறவில்லை.

திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்த படத்தின் வெளியீட்டுக்கு சில நாட்கள் முன்பு படத்தின் டீசர், டிரெய்லர், ஸ்னீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் வெளியிடுவது வழக்கம்.

சமீபகாலமாக அப்படி வெளியிடப்படும் காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ் போட்டு கிண்டல், கேலி செய்கிறார்கள். சாமி 2 படத்தின் முதல் டிரெய்லரில் விக்ரம் பேசும் வசனங்கள் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டன. அவை படத்தில் இடம்பெறவில்லை.

இதேபோல படம் வெளியான அன்று சூரியின் காமெடி காட்சிகளுக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. எனவே சூரியின் காமெடி காட்சிகளில் சில நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டன.

ரசிகர்களின் கருத்துகளை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொள்வது தமிழ் சினிமாவுக்கு நல்லதுதான் என்கிறார்கள் விமர்சகர்கள்.