பிரபல இயக்குனருடன் இணையும் கார்த்தி

பிரபல இயக்குனருடன் இணையும் கார்த்தி

9 October 2018 05:52 am

‘தேவ்’ படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் நடித்து வரும் கார்த்தி, அடுத்ததாக பிரபல மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்பின் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப். மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப், கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

இந்தப் படமும் பாபநாசம் படம் போலவே திரில்லராக தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.