நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்

நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்

10 October 2018 01:46 am

சர்ச்சையான லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை அறம், குலேபகாவலி படங்களை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிக்கிறார். இந்த நிலையில் இப் படத்திற்கு ஐரா என பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நடிக்கிறார் நயன்தாரா. “ஐரா” என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் திகில் படமாக தயாராகிறது என தயாரிப்பாளர் ராஜேஷ் கூறியுள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் ஐரா, டிசம்பர் 25 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.